முகப்பு
தமிழ்நாடு

2023-ல் ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நடத்தப்படும்: தமிழக அரசு

2023ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:05 AM
கோப்புப்படம்
பகிர்:


2023ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் மாவட்டங்களில், வரும் ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி உலகப் புகழ்பெற்றவை. வழக்கமாக ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரத்திலும் ஜனவரி 15ஆம் தேதி பாலமேட்டிலும் 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →