தமிழ்நாடு

பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றுவேன்: உதயநிதி ஸ்டாலின்

DIN

பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றுவேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சராக சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக தந்தையும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தயாரை சந்தித்து வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின் டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், “எப்போதும் வழிநடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து, பதவியேற்ற பிறகு அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு தலைமைச் செயலகத்தில் உள்ள அறையில் பொறுப்பேற்கவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT