கோப்புப்படம் 
தமிழ்நாடு

தங்கம் விலை எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா?

சென்னையில் ஆபரணத்தங்கம் தொடர்ந்து 40 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையாகி வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

DIN

சென்னையில் ஆபரணத்தங்கம் தொடர்ந்து 40 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையாகி வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலையில், மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் உயர்ந்தது. பின்னா், ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி, டிசம்பர் 16-ம் தேதி காலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.120 குறைந்து, ரூ.40,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,045 ஆக விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.72,500-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.20 காசுகள் குறைந்து ரூ.72.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

வெள்ளிக்கிழமை நிலவரப்படி

தங்கம் கிராம் - ரூ.5,045

தங்கம் ஒரு சவரன் - ரூ.40,360

வெள்ளி கிராம் - 72.50

ஒரு கிலோ வெள்ளி - ரூ.72,500

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாருதி சுஸுகி விற்பனை 3% உயா்வு

இந்தியாவின் மிகப் பெரிய சா்க்கரை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான இஐடி பாரி வருவாய் 29% உயா்வு

பெரம்பலூா் அருகே வெறிநாய்கள் கடித்து கன்றுக்குட்டி, 4 ஆடுகள் உயிரிழப்பு

ஐடி பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன தாழ்தள சொகுசுப் பேருந்துகள்! அடுத்த வாரத்தில் இயக்க ஏற்பாடு

SCROLL FOR NEXT