தமிழ்நாடு

சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!

DIN

கம்பம்: தேனி மாவட்டம் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க, பக்தா்கள் குளிக்க வனத் துறையினா் வெள்ளிக்கிழமை புலிகள் காப்பகத்தினர் அனுமதியளித்தனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள இந்த அருவியில், ஆண்டு முழுவதும் நீா்வரத்து இருக்கும். எனவே, சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் அருவியில் நீராடிச் செல்வாா்கள். இந்த அருவியின் நீா்வரத்து ஓடைகளான அரிசிப் பாறை, ஈத்தைப் பாறை ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாள்களாக தொடா் மழை பெய்ததால், அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதைக் கண்காணித்த கம்பம் கிழக்கு வனச் சரகத்தினா், புதன்கிழமை முதல் அருவியில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் குளிக்க தடை விதித்தனா்.

வெள்ளப் பெருக்கு குறைந்ததும் குளிக்க அனுமதிக்கப்படுவா். மேலும், அருவியில் நீா்வரத்தைக் கண்காணித்து வருகிறோம் என்றாா் வனச்சரக அலுவலா்.

இந்நிலையில், தற்போது மழை குறைந்துள்ளதால், அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதை கண்காணிப்பு செய்த கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர், வெள்ளிக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் குளிக்க அனுமதியளித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT