தமிழ்நாடு

ஆவின் பொருள்கள் எட்டாக் கனியா ஆகிறதா? நெய், வெண்ணெய் விலை உயர்வுக்கு இபிஎஸ் கண்டனம் 

ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையை ஒன்பது மாதத்தில் மூன்று முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையை ஒன்பது மாதத்தில் மூன்று முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், ஆவின் நோக்கமே குறைந்த விலையில் தரமான பொருள்கலை மக்களுக்கு வழங்குவது தான். ஆனால் திமுக அரசு நெய்யின் விலையினை கடந்த ஒன்பது மாதத்தில் மூன்று முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த விடியா அரசிற்கு  எனது கடுமையான கண்டனங்கள். கடந்த மார்ச் மாதம் ரூ.515-க்கு கிடைத்த ஆவின் நெய் தற்போது ரூ.115 உயர்த்தப்பட்டு ரூ.630-க்கு விற்கப்படுகிறது.

எளியோர் மற்றும் நடுத்தர வர்கத்தினருக்கு ஆவின் பொருட்களை எட்டாகனியாக்கி இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற நிலைக்கு தள்ளியுள்ளது இந்த திமுக அரசு. இன்று வெண்ணை விலையையும் கிலோவிற்கு ரூ. 20 உயர்த்தியுள்ளனர். 

எளிய மக்கள் தங்களுக்கு தேவையான குறைந்தபட்ச ஊட்டச்சத்தை பால் மற்றும் பால் பொருட்கள் மூலம்தான் பெற்று வருகின்றனர். தற்போது அதுகூட அவர்களுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா?  என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான காற்று தேவை: காற்று சுத்திகரிப்பானுக்கு அதிக ஜிஎஸ்டி விதிக்கலாமா? - நீதிமன்றம்

து மேரி மெயின் தேரா மெயின் தேரா து மேரி படத்தின் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

முதல்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம்! - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீதான தாக்குதல்கள் வருத்தமளிக்கின்றன! - கேரள முதல்வர் கண்டனம்!

கடலூர் அருகே கார்கள் மீது அரசுப் பேருந்து மோதியதில் 7 பேர் பலி!

SCROLL FOR NEXT