தமிழ்நாடு

கிருஷ்ணா நதியில் மூழ்கி 5 சிறுவர்கள் பலி!

ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா நதியில் குளிக்கச் சென்ற 5 சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர். 

DIN

ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா நதியில் குளிக்கச் சென்ற 5 சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர். 

வெள்ளியன்று ஐந்து சிறுவர்கள் கிருஷ்ணா நதியில் குளிக்கச்சென்றுள்ளனர். நீரின் வேகம் திடீரென அதிகரித்துள்ளது. 

முதலில் ஒரு சிறுவன் மூழ்குவதைக் கண்டதாகவும், மேலும் நான்கு பேர் அவரைக் காப்பாற்றச் சென்றதாகவும் நேரில் பார்த்த ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 

மூன்று சடலங்கள் இன்று மீட்கப்பட்ட நிலையில், இரண்டு பேர் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து தாடேபள்ளி காவல் ஆய்வாளர் சேஷகிரி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT