வெற்றி பெற்ற மாணவருக்கு கருப்பு பெல்ட் மற்றும் சான்றிதழை  வழங்குகிறார்  பயிற்சியாளர் கே.அர்ச்சுணன். 
தமிழ்நாடு

சங்ககிரியில் மாணவர்களுக்கு கருப்பு பெல்ட் வழங்கும் விழா 

கராத்தே அமைப்பின் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சங்ககிரி கிளையைச் சேர்ந்த மாணவர்களுக்கு  கருப்பு பெல்ட், சான்றிதழ்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. 

DIN

சங்ககிரி: கியோ கோஷின் கராத்தே அமைப்பின் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சங்ககிரி கிளையைச் சேர்ந்த மாணவர்களுக்கு  கருப்பு பெல்ட், சான்றிதழ்கள் வழங்கும் விழா சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. 

கியோ கோஷின் கராத்தே அமைப்பின் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் சங்ககிரி கிளையின் சார்பில் பி.கனகராஜ், எ.சதீஸ்குமார் ஆகியோர் பங்கேற்று  கருப்பு பெல்ட் பெற்றனர். 

வெற்றி பெற்ற இரு மாணவர்களுக்கும் சங்ககிரி கியோ கோஷின் கராத்தே அமைப்பின் தலைமை பயிற்சியாளர் கே.அர்ச்சுணன் கருப்பு பெல்ட், சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். 

கொங்கணாபுரம் தனியார் மெட்ரிக் பள்ளி தாளாளர் கே.ரவிசங்கர், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

மேட்டூர் அணை நிலவரம்!

சொல்லப் போனால்... ராகுல், தேர்தல் ஆணையம், டிரம்ப்... அல்லோலகல்லோலம்!

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி

SCROLL FOR NEXT