தமிழ்நாடு

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: தங்க காலணி வென்ற எம்பாப்பே!

கத்தாரில் நடைபெற்ற 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அதிக கோல்கள் அடித்த பிரான் வீரர் எம்பாப்பே தங்க காலணி வென்றார். 

DIN

கத்தாரில் நடைபெற்ற 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அதிக கோல்கள் அடித்த பிரான் வீரர் எம்பாப்பே தங்க காலணி வென்றார். 

கத்தாரில் நடைபெற்ற 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா ‘பெனால்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

அந்த அணி 3-ஆவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது. 

இந்த ஆட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஆா்ஜென்டீனாவுக்காக லயோனல் மெஸ்ஸி, டி மரியா ஆகியோரும், பிரான்ஸுக்காக கிலியன் பாபேவும் கோல்கள் அடித்து அசத்தினாா்.

22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அபாரமாக விளையாடிய லயோனல் மெஸ்ஸிக்கு சிறந்த வீரர் விருது, சாம்பியன் கோப்பை, தங்கப் பதக்கம் மற்றும் கோல்டன் பந்தும் வழங்கப்பட்டது. 

அதேபோன்று அதிக கோல்கள் அடித்த பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பேவுக்கு தங்க காலணியும், சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறை மார்டினெஸ்க்கும், சிறந்த இளம் வீரருக்கான விருது என்சோ பெர்னாண்டஸ்க்கும் வழங்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT