கோப்புப்படம் 
தமிழ்நாடு

குமரியிலிருந்து கடலுக்குச் சென்ற 5 மீனவர்கள் காணவில்லை!

கன்னியாகுமரியில் இருந்து கடலுக்குச் சென்ற 5 மீனவர்கள் கரைக்கு திரும்பாததால் கடலோரக் காவல் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

DIN

கன்னியாகுமரியில் இருந்து கடலுக்குச் சென்ற 5 மீனவர்கள் கரைக்கு திரும்பாததால் கடலோரக் காவல் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும், கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கடலூர், ராமேசுவரம் உள்ளிட்ட தென் கடலோர மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல இன்றுமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரியில் இருந்து மூன்று நாள்களுக்கு முன்பு, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரைக்கு திரும்பாததால், அவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT