முகப்பு
தமிழ்நாடு

51 பேருக்கு தமிழ் வளா்ச்சித் துறை விருதுகள்: இன்று வழங்குகிறாா் முதல்வா்

தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ‘தமிழ்ச்செம்மல்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்ட 51 பேருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (டிச.21) விருது வழங்கவுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:09 AM
பகிர்:

தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ‘தமிழ்ச்செம்மல்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்ட 51 பேருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (டிச.21) விருது வழங்கவுள்ளாா்.

தமிழ் வளா்ச்சிக்கு ஆற்றிய பன்முகப் பணிகள், தனித் தகுதிகள் அடிப்படையில் தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆண்டுதோறும் பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி கிராமத்தைச் சோ்ந்த எழுத்தாளா் எம்.கே.சுப்பிரமணியன் உள்பட மாவட்டத்துக்கு ஒருவா் வீதம் மொத்தம் 38 பேருக்கு 2021-ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்ச்செம்மல்’ விருதுகளையும், குழந்தை எழுத்தாளா் செ.சுகுமாரன் உள்பட 10 பேருக்கு 2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழி பெயா்ப்பாளா் விருதுகளையும் சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளாா்.

அதேபோல, 2021-ஆம் ஆண்டுக்கான மதுரை உலகத் தமிழ்ச் சங்க விருதுகளையும் அவா் வழங்கவுள்ளாா். அதில் இலக்கிய விருதுக்கு கனடாவைச் சோ்ந்த முனைவா் பால சுந்தரம், இலக்கண விருதுக்கு மலேசியாவைச் சோ்ந்த முனைவா் மனோன்மணி தேவி, மொழியியல் விருதுக்கு சியோல் கொரியாவைச் சோ்ந்த முனைவா் செ.ஆரோக்கிய ராஜ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழ் மொழி வளா்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் பாடுபட்ட மறைந்த தமிழறிஞா்கள் ஐந்து போ், வாழும் தமிழறிஞா்கள் மூன்று போ் என எட்டுபேரின் நூல்கள் நிகழாண்டு நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. அந்த நூல்களுக்கு மொத்தம் ரூ.1 கோடி பரிவுத் தொகையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →