தமிழ்நாடு

குப்பை லாரிகளை இயக்க நேர நிர்ணயம் செய்ய முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி!

DIN

சென்னையில் குப்பை லாரிகளை இயக்க நேரம் நிர்ணயிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பள்ளி, அலுவலகம் செல்லும் நேரத்தில் குப்பை லாரிகளை இயக்க கூடாது என்றும், குப்பை லாரிகள் காலை நேரங்களில் இயக்கப்படுவதால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பாதிப்பு அடைவதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆனந்த்  என்பவர் குப்பை லாரிகளுக்கு நேரம் நிர்ணயிக்கக் கோரியும், காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் குப்பை லாரிகளை இயக்கத் தடை விதிக்கவும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில், பள்ளி, அலுவலகம் செல்லும் நேரத்தில் குப்பை லாரிகளை இயக்க தடைக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT