தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது அடுத்த 48 மண நேரத்தில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும். 

இதன் காரணமாக, டிசம்பர் 25-ம் தேதி  6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மற்றபடி இன்று முதல் டிச.24-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு

டிச.21: தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். 

மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கத்தாரை தாக்கினால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும்! டிரம்ப்

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

காந்தி, காமராஜர் தியாகத்தையும், தேசபக்தியையும் போற்றி வணங்குவோம்: கே.அண்ணாமலை

விக்கிரவாண்டி அருகே கார் தீப்பிடித்ததில் 3 பேர் பலி!

காந்தி பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்! மோடி

SCROLL FOR NEXT