முகப்பு
தமிழ்நாடு

ரூ. 41 ஆயிரத்தை எட்டிய தங்கம் விலை! வெள்ளி கிலோவுக்கு ரூ. 2,200 உயர்வு!!

சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 41 ஆயிரத்தை எட்டியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:09 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 41 ஆயிரத்தை எட்டியுள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக டிச. 14 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ. 40,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

அதன்பின்னர் படிப்படியாக குறைந்து நேற்று(டிச.20) ஒரு சவரன் தங்கம் ரூ. 40,520-க்கு விற்பனையானது. 

இந்நிலையில் இன்று(டிச. 21, புதன்கிழமை) சவரனுக்கு மேலும் ரூ. 400 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 40,920 -க்கு விற்பனையாகிறது. இதன்மூலமாக 22 காரட் ஒரு சவரன் தங்கம் ரூ. 41 ஆயிரத்தைத் தொட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5,115 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதேபோல, வெள்ளி விலையும் இன்று கடுமையாக அதிகரித்துள்ளது. கிலோவுக்கு ரூ.2,200 அதிகரித்து ரூ.74,700-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2.20 அதிகரித்து ரூ.74.70--க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

முழு கட்டுரையைப் படிக்க →