திருப்பூரில் மூதாட்டியைக் கொலை செய்து 5 பவுன் நகைப் பறிப்பு!
திருப்பூரில் மூதாட்டியைக் கொலை செய்து 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
தமிழ்நாடுதிருப்பூரில் மூதாட்டியைக் கொலை செய்து 5 பவுன் நகைப் பறிப்பு!
திருப்பூரில் மூதாட்டியைக் கொலை செய்து 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் மூதாட்டியைக் கொலை செய்து 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பூர் எஸ்.வி காலனி டி.எஸ்.ஆர்.லே அவுட் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, இவரது மனைவி சந்திராமணி(67), சந்திராமணி புதன்கிழமை அதிகாலையில் வீட்டின் முன்பக்க கேட்டைத் திறந்து வைத்து விட்டு உணவு சமைத்துக் கொண்டிருந்தார். ஆனால், நீண்ட நேரமாகியும் சமையல் அறையில் இருந்து வெளியில் வராததால் சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்தபோது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து முத்துசாமி கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சந்திராமணியின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் சந்திராமணியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றது தெரியவந்தது. அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் 55 வயதுடைய மர்ம நபர் ஒருவர் வீட்டில் இருந்து வெளியேறியது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.