சந்திரமெளலி ரெட்டி 
தமிழ்நாடு

சேகர் ரெட்டி மகளுக்கு நிச்சயிக்கப்பட்டவர் மாரடைப்பால் உயிரிழப்பு!

பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை சந்திரமெளலி ரெட்டி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை சந்திரமெளலி ரெட்டி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினரும், தொழிலதிபருமான சேகர் ரெட்டியின் மகளுக்கும், திருப்பதி தேவஸ்தானம் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியின் மகன் சந்திரமெளலி ரெட்டிக்கும்(வயது 28) சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இவர்களுக்கு அடுத்தாண்டு ஜனவரி 26ஆம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில், திருமண வேலைகளில் ஈடுபட்டு வந்த சந்திரமெளலி ரெட்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் டிசம்பர் 18-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த நிலையில், இன்று காலை 8.20 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி சந்திரமெளலி உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது

திருமணத்திற்கு ஒரு மாதமே உள்ள நிலையில், மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பகுஜன் சமாஜ் கட்சியைத் தடுக்க ரகசிய கூட்டணி: மாயாவதி குற்றச்சாட்டு!

மகளிர் உலகக் கோப்பை: கடைசி இடத்தில் பாகிஸ்தான்!

குன்றுகளை தகர்த்து, ஆறுகளை மடைமாற்றி... உருவாக்கப்பட்ட நவி மும்பை விமான நிலையம்!

இருமல் மருந்து: ம.பி.யில் குழந்தைகள் பலி 22 ஆக உயர்வு!

மக்களே உஷார்!! வாட்ஸ்ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழால் ரூ. 97,000 மோசடி!

SCROLL FOR NEXT