தமிழ்நாடு

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது!

DIN

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.

இந்நிலையில், இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்னும் 24 மணிநேரத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து கன்னியாகுமரி கடற்பகுதியை நோக்கி வரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாகை கடற்கரையிலிருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான மாண்ட்ஸ் புயல் கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி சென்னை - மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கங்கனாவின் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

சென்னையில் வெப்பத்தை தணித்த மழை..!

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

கேஜரிவாலுக்கு சிறப்பு சலுகை: உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த அமித் ஷா

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

SCROLL FOR NEXT