கோப்புப் படம் 
தமிழ்நாடு

சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவு!

சென்னையில் நடைபெற்று வந்த 20வது சர்வதேச திரைப்பட விழா நிறைவு பெற்றது. இதில், 51 நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

DIN

சென்னையில் நடைபெற்று வந்த 20வது சர்வதேச திரைப்பட விழா நிறைவு பெற்றது. இதில், 51 நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

சென்னையில் 20வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. சென்னை பிவிஆா் மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், அண்ணா சினிமாஸ் உள்ளிட்ட திரையரங்குகளில் படங்கள் திரையிடப்பட்டன.

ஆர்ஜென்டீனா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஹங்கேரி, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளைச் சோ்ந்த 100- க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டன.

மேலும், திரைப்பட விழாவில் பங்கேற்ற படங்களுக்கு விருதுகளும் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகராக மாமனிதன் திரைப்படத்துக்காக விஜய் சேதுபதி தேர்வு செய்யப்பட்டார். சிறந்த நடிகையாக கார்கி படத்தில் நடித்த சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டார். 

நிறைவு விழாவில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

SCROLL FOR NEXT