முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்: தொடர்ந்து 15-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!

மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 15 ஆவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:10 AM
கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 15 ஆவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.

வியாழக்கிழமை காலை 15 ஆவது நாளாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருகிறது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழையின் காரணமாக புதன்கிழமை மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5, 600 கன அடியிலிருந்து 9,600 கன அடியாக அதிகரித்துள்ளது. 

நீர்வரத்து அதிகரித்துள்ளதால்  மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு  வினாடிக்கு 5000 கன அடியிலிருந்து வினாடிக்கு 9,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது, அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.