தமிழ்நாடு

சுமார் 21 ஆண்டுகளுக்குப் பின் கிறிஸ்துமஸ் நாளில் மழை பெய்யப் போகிறதாம்!

DIN


சென்னை: சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கிறிஸ்துமஸ் நாளில் மழை பெய்யப் போகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 25ஆம் தேதி பரவலாக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையங்கள் எச்சரிக்கை விடுத்துவரும் நிலையில், அது பற்றிய பதிவு ஒன்றை தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

முகநூல் பதிவில் தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக கிறிஸ்துமஸ் நாளில் மழைப் பொழிவைக் காணப்போகின்றன. கடைசியாக சென்னையில் கிறிஸ்துமஸ் நாளில் மழை பதிவானது 21 ஆண்டுகளுக்கு முன்பு. அதாவது 2001ஆம் ஆண்டில்.

சென்னையில் மட்டுமல்ல, கடலோர மாவட்டங்கள், தமிழகத்தின் உள் மற்றும் தெற்கு மாவட்டங்களும் 25ஆம் தேதி மழையைச் சந்திக்கவிருக்கின்றன. சென்னைக்கு இன்னும் 76 மி.மீ. மழை பாக்கி இருக்கிறது. அப்படி கிடைத்துவிட்டால், வடகிழக்குப் பருவமழையில் நாம் 1000 மி.மீ. மழையை தொட்டுவிடலாம்.

டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மழை இருக்கும். குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், குமரி மாவட்டங்களில்.

விடுமுறைக்கால பயணங்கள்..
டிசம்பர் 24 / 25 முதல் 27 / 28 வரை பரவலாக மழை இருந்தாலும், விடுமுறைக்கால பயணங்களை மேற்கொள்ளலாம். சபரிமலை செல்வோர், ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்வதைக் காணலாம். ஆனால், மிகப்பெரிய அச்சுறுத்தும் மழையாக இருக்காது. மாஞ்சோலை செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் மட்டும் 25, 26, 27 ஆகிய நாள்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT