முகப்பு
தமிழ்நாடு

8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

தமிழகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேருக்கு கூடுதல் தலைமைச்செயலாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:10 AM
பகிர்:

தமிழகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேருக்கு கூடுதல் தலைமைச்செயலாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசில் 1992ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேரை கூடுதல் தலைமை செயலாளர் பொறுப்புக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் வெ. இறையன்பு இன்று பிறப்பித்துள்ளார். 

அதன்படி, ஜெ. ராதாகிருஷ்ணன், ராஜேந்திர குமார், நீரஜ் மிட்டல், ராஜேஷ் லக்கானி, மங்கத் ராம் சர்மா, பிரதீப் யாதவ், குமார் ஜெயந்த், கே.கோபால் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

தற்போது உணவு மற்றும் கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளராக உள்ள ஐஏஎஸ் ஜெ. ராதாகிருஷ்ணன் கூடுதல் தலைமை செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →