கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர்: திமுக வெற்றி
கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் தேன்மொழி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் தேன்மொழி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் முடிவை வெளியிடலாம் என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவைத் தொடர்ந்து தேர்தல் முடிவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டார்.
அதன்படி, தேர்தலில் திமுக வேட்பாளர் தேன்மொழி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் தேன்மொழி 7 வாக்குகள், அதிமுக வேட்பாளர் ரமேஷ் 4 வாக்குகள் பெற்றுள்ளனர். கடந்த டிச19ம் தேதி கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் நடைபெற்றது.
அப்போது, அதிமுகவைச் சேர்ந்த திருவிக என்பவர் கடத்தப்பட்டதாகவும், இந்த தேர்தலில் திமுக முறைகேடாக செயல்பட்டதாகவும், தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.