முகப்பு
தமிழ்நாடு

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை 

சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:11 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. 

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 470 கிலோமீட்டர் கிழக்கில் நிலைகொண்டுள்ளது.

இதன் காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி சென்னையில் கிண்டி, அம்பத்தூர், தி.நகர், வடபழனி, கோயம்பேடு, ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.  இதனால் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளானார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →