ரயில்வே மேம்பாலப் பணி: சேலம் வழிச் செல்லும் 4 ரயில்கள் ரத்து!
காட்பாடி அருகே ரயில்வே மேம்பாலப் பணி நடப்பதால் சேலம் வழியாகச் செல்லும் நான்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சேலம்: காட்பாடி அருகே ரயில்வே மேம்பாலப் பணி நடப்பதால் சேலம் வழியாகச் செல்லும் நான்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட வாலாஜா ரோடு காட்பாடி மார்க்கத்தில் முகுந்தராயபுரம் திருவலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தை சீரமைக்கு பணி நடைபெற்று வருகிறது. இதனால் சேலம் வழியாக செல்லும் ரயில்களில் சில ரயில்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
இதன்படி சென்னை சென்ட்ரல் -கோவை எக்ஸ்பிரஸ், கோவை - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் வரும் ஜனவரி 3 ,4 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுபோல சென்னை சென்ட்ரல் -கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை - சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகியவை வரும் ஜனவரி 4-ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
சேலம் - அரக்கோணம் ரயில் வரும் டிச. 26 , 27 மற்றும் ஜனவரி 3 ,4 ஆகிய தேதிகளில் சேலத்தில் இருந்து காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது காட்பாடி - அரக்கோணம் இடையே ஒரு பகுதி போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் அரக்கோணம் - சேலம் ரயில் வரும் 27, 28 ஜனவரி 4 ,5 ஆகிய தேதிகளில் காட்பாடியில் இருந்து சேலத்திற்கு இயக்கப்படுகிறது.
அரக்கோணம் - காட்பாடி இடையே ஒரு பகுதி போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்