முகப்பு
தமிழ்நாடு

மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி காலமானார்

மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி (94) வயது முதிர்வால் திங்கள்கிழமை(டிச.26) காலை காலமானார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:12 AM
லலிதா பாரதி
பகிர்:

மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி (94) வயது முதிர்வு காரணமாக திங்கள்கிழமை (டிச.26) காலை காலமானார்.

பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாவின் மகளான லலிதா பாரதி, இசையை முறையாகக் கற்றுக்கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசை ஆசிரியராக பணியாற்றி பல மாணவர்களை உருவாக்கியவர். பெண்ணியம் சார்ந்த செயல்பாடுகளிலும்,  பாரதியாரின் பாடல்களை இசை மற்றும் நூல் வடிவில் பரப்பும் தமிழ்ப்பணியிலும் முக்கிய பங்கு கொண்டிருந்தார்.

இந்நிலையில், லலிதா பாரதி வயது முதிர்வு காரணமாக திங்கள்கிழமை (டிச.26) காலை 9 மணியளவில் அவரது இல்லத்தில் காலமானார். அவரது உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

அவரது மறைவு குறித்து தகவல் அறிந்து அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →