தமிழ்நாடு

கடும் பனிமூட்டம்: சென்னையில் தரையிறங்க முடியாமல் திரும்பிச் சென்ற விமானங்கள்!

சென்னையில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியதால், விமானங்கள் தரையிறக்க முடியாமல் புறப்பட்ட இடத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது.

DIN

சென்னையில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியதால், விமானங்கள் தரையிறக்க முடியாமல் புறப்பட்ட இடத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது.

நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக கடுமையான பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் வழக்கத்தைவிட பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், சென்னை விமான நிலைய பகுதியில் இன்று காலை பனிமூட்டம் சூழ்ந்ததால், பெங்களூரு மற்றும் கோவையில் இருந்து வந்த விமானங்கள் தரையிறக்க முடியாமல் அந்தந்த ஊர்களுக்கே திருப்பிவிடப்பட்டது. கத்தாரில் இருந்து சென்னை வந்த விமானமும் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது.

மேலும், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய பெரும்பாலான விமானங்கள் இன்று காலை தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT