அவிநாசியில் தனியார் நிறுவனத்தைக் கண்டித்து விசிகவினர் சாலை மறியல்!
அவிநாசியில் தனியார் நிதி நிறுவனத்தைக் கண்டித்து விசிகவினர் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவிநாசியில் தனியார் நிதி நிறுவனத்தைக் கண்டித்து விசிகவினர் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தினர் கூலித்தொழிலாளிகளிடம் அதிக வட்டிக்குப் பணம் கொடுத்துவிட்டு, அவர்களை கந்துவட்டி ரவுடி கும்பலை வைத்து மிரட்டி வருவதாகக் கூறி விசிகவினர் ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியல் ஈடுபட்டனர்.
அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு விசிக மாவட்டச் செயலாளர் தமிழ்வேந்தன் தலைமை வகித்தார். திருப்பூர் வடக்கு சட்டப்பேரவை தொகுதி செயலாளர் ஏ.பி.ஆர்.மூர்த்தி, திருப்பூர் மக்களவை தொகுதி செயலாளர் பழ.சண்முகம், மாநிலத் துணைச் செயலாளர் துரைவளவன், ஒன்றிய செயலாளர் ராசுவளவன், பொறுப்பாளர்கள் தம்பி முருகானந்தம், ரங்கசாமி, குமாரவளவன் உள்பட 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவர்களை அவிநாசி போலீஸார் கைது செய்து, மண்டபத்தில் அடைத்தனர்.