தமிழகத்தில் டிச.30 வரை லேசான பனிமூட்டம் நிலவும்: வானிலை ஆய்வு மையம்! 
தமிழ்நாடு

தமிழகத்தில் டிச.30 வரை லேசான பனிமூட்டம் நிலவும்: வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் டிசம்பர் 30-ம் தேதி வரை லேசான பனிமூட்டம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

தமிழகத்தில் டிசம்பர் 30-ம் தேதி வரை லேசான பனிமூட்டம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 

இன்று முதல் டிச.30 வரை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட உள் தமிழக மாவட்டங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23.24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட கேல்மெகி புயல்: 66 பேர் பலி!

மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவிற்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல: பிரகாஷ் ராஜ்

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

SCROLL FOR NEXT