சங்கர் ஜிவால் 
தமிழ்நாடு

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும்!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார். 

DIN

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார். 

புத்தாண்டு தினத்தில் முக்கியமாக இந்தாண்டு உயிரிழப்புகள் இல்லாத புத்தாண்டை கொண்டாட்ட வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும். பாதுகாப்புப் பணியில் 16 ஆயிரம் போலீஸார் ஈடுபட உள்ளனர். 

புத்தாண்டு தினத்தில் மெரினாவில் பொதுமக்கள் கூட தடையில்லை. மக்கள் கூட்டத்தைக் கண்காணிக்க அதிநவீன இரவு நேர டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளது. 

சென்னை காமராஜர் சாலையில் ரிசர்வ் வங்கி முதல் கலங்கரை விளக்கம் வரை மாலை 8 மணி முதல் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பைக் ரேஸ் நடக்காமல் இருக்க தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. சோதனைச் சாவடிகள் மட்டுமின்றி ரோந்து வாகனம் மூலமும் பைக் ரேஸ் தடுக்கப்படும். 

மதுபோதையில் வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

மெரினா காமராஜர் சாலையில் டிசம்பர் 31-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதியில்லை.

புத்தாண்டு கொண்டாட்டங்களை நள்ளிரவு 1 மணிக்குள் நட்சத்திர விடுதிகள் முடித்துக்கொள்ள வேண்டும். நட்சத்திர விடுதிகளில் போதைப்பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது. 

நட்சத்திர விடுதிகளில் 80 சதவீதம் பேருக்கு மட்டும் அனுமதியளிக்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும். 

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இசைக் கச்சேரியில் அதிக ஒலி எழுப்பும் ஸ்பீக்கர்கள் அமைக்கக்கூடாது. அரசு விதித்துள்ள கரோனா கட்டுப்பாடுகள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். 

காவல்துறை தரப்பில் தரப்படும் க்யூஆர் கோடு குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் கார்களில் ஒட்ட வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் உதவு மருத்துவக் குழு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் காவல்துறை விதித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ் வோக்ஸ்; எதற்காக?

பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி மீண்டும் அமெரிக்கா பயணம்! 2 மாதங்களில் 2வது முறை!

தீராத அனுபவங்கள்... மம்மூட்டி - 54!

வாக்காளர் பட்டியல் குளறுபடி என்ன? ராகுலிடம் தரவு கேட்கும் கர்நாடக தேர்தல் அதிகாரி

புதின் இந்தியா வருகை! டிரம்ப்புக்கு எதிராக இந்தியா - ரஷியா கூட்டு சேருமா?

SCROLL FOR NEXT