கோப்புப் படம் 
தமிழ்நாடு

கால்பந்து நட்சத்திரம் பீலே மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் 

கால்பந்து  விளையாட்டு வீரர் பீலே அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

DIN

கால்பந்து  விளையாட்டு வீரர் பீலே அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

செரிமான மண்டலப் பகுதி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவா், கடந்த ஆண்டுமுதல் அதற்காக சிகிச்சை பெற்று வந்தாா். பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்காக கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பீலேவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படாத நிலையே நீடித்தது.

இந்நிலையில் அவா் சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை நள்ளிரவு காலமானதை அவரின் முகவரான ஜோ ஃப்ராகா உறுதி செய்தாா். 

கால்பந்து விளையாட்டின் அரசனாக வா்ணிக்கப்படும் பீலேவின் மறைவுக்கு உலகமே அஞ்சலி செலுத்துகிறது.

பீலேவின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

பீலே - கால்பந்தாட்டத்தின் அரசராக மட்டுமல்ல, பல கோடிப் பேருக்கு ஊக்கமாக அமைந்து இருபதாம் நூற்றாண்டில் இணையற்ற தாக்கத்தைச் செலுத்திய ஆளுமைகளில் ஒருவராக விளங்கியவர் ஆவார். 

கருப்பு முத்து என்று புகழப்பட்ட பீலே என்றென்றும் கால்பந்தின் அடையாளமாக அனைத்து வகையிலும் திகழ்வார். யாராலும் மறக்கவொண்ணாத ஒரு பாரம்பரியத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று!

இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்

SCROLL FOR NEXT