மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

மோடியின் தாய் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

DIN



சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

குஜராத் மாநிலம், அகமதாபாதில் உள்ள யு.என். மேத்தா இதய நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவா் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா். பிரதமா் மோடி அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். சுமாா் ஒரு மணி நேரம் மருத்துவமனையில் இருந்து அவா் மருத்துவா்களிடம் தாயாரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தாா்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி வெள்ளிக்கிழமை அதிகாலை உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் காலமானார். 

ஹீராபென் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  

அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, தங்கள் அன்புத்தாயார் ஹீராபென் அவர்களுடன் தாங்கள் கொண்டிருந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பை அனைவருமே அறிவோம். அன்னையின் இழப்பினால் உண்டாகும் வலி என்பது யாராலும் தாங்கிக்கொள்ள முடியாதது. தங்கள் தாயாரின் இழப்பினால் நான் அடைந்துள்ள துயரை விவரிக்கச் சொற்கள் இன்றித் தவிக்கிறேன்.

துயர்மிகு இந்நேரத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் தாயாருடன் தாங்கள் கொண்டிருந்த அழகிய நினைவுகளில் அமைதியும் இளைப்பாறுதலும் பெறுவீர்களாக என்று குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

SCROLL FOR NEXT