மூடுபனியால் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வரும் வாகனம் 
தமிழ்நாடு

கெங்கவல்லி அருகே மூடுபனி! வாகன ஓட்டிகள் அவதி

காலை 8 மணி ஆகிய நிலையிலும் பனிமூட்டங்கள் அதிக அளவில் கொட்டுவதால் இருள் போல் காணப்படுகிறது. 

DIN

சேலம்: கெங்கவல்லி அருகே காலை நேரத்தில் மூடுபனி கொட்டுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். முகப்பு விளக்கை எரியவிட்டவாறு கடும் குளிருடன் பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் கார்த்திகை மார்கழி தை ஆகிய மூன்று மாதங்களில் ஆண்டுதோறும் இயற்கையாகவே அதிக அளவில் பனிப்பொழிவுகள் ஏற்படுவது வழக்கம்.  அதேபோல் இந்த ஆண்டும் பணிபொலிவுகள் தொடங்கியதை
யடுத்து சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை கொண்டையம்
பள்ளி ஆகிய பகுதிகளில் மார்கழி மாதத்தையொட்டி கட்நத சில நாட்களாக தொடர்ந்து பனிப்பொழிவுகள் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை 8 மணி ஆகிய நிலையிலும் பனிமூட்டங்கள் அதிக அளவில் கொட்டுவதால் இருள் போல் காணப்படுகிறது. காலையில் அரசு மற்றும் தனியார் பணிகளுக்கு செல்பவர்களும் அப்பகுதியில் உள்ள விவசாயிகளும் பொதுமக்களும் வெளியில் வாகனங்களில் சென்றபோது எதிரே வரும் வாகனங்கள் வருவதே தெரியாமல் வாகன ஓட்டிகள் மின்விளக்கை எரிய விட்டவாறு சென்றனர்.

பனிமூட்டங்கள் இருள் போல் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகள் மரங்களும் பனிமூட்டங்களால் மூடப்பட்டு இருப்பதே தெரியாத நிலையில் இருள் போல் காணப்படுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த  காலை நேர பனிமூட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT