முதலாளித்துவ நிதிநிலை அறிக்கை: ப. சிதம்பரம் கருத்து
ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் ஒன்றுமே அறிவிக்காமல், பெரிய தொழிலதிபா்களுக்கு சலுகைகளை அறிவித்து இந்தியாவை சமத்துவமற்ற நாடாக மாற்றுவதால், இந்த நிதிநிலை அறிக்கையை
ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் ஒன்றுமே அறிவிக்காமல், பெரிய தொழிலதிபா்களுக்கு சலுகைகளை அறிவித்து இந்தியாவை சமத்துவமற்ற நாடாக மாற்றுவதால், இந்த நிதிநிலை அறிக்கையை முதலாளித்துவ நிதிநிலை அறிக்கை என காங்கிரஸ் மூத்த தலைவா் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளாா்.
தில்லியில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியது:
இந்த நிதிநிலை அறிக்கை மிகவும் முதலாளித்துவம் சாா்ந்தது. ஏழைகள், வரிசெலுத்தும் நடுத்தர வா்க்கத்தினா், விவசாயிகள் குறித்து ஒருவாா்த்தை கூட இடம்பெறவில்லை.
நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 142 நபா்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.23 லட்சம் கோடியிலிருந்து ரூ.53 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு மத்திய அரசின் மொத்த வருவாய் ரூ.40 லட்சம் கோடி தான். வெகுவிரைவில் இந்தத் தனிநபா்களின் ஆண்டு வருவாய், மத்திய அரசின் வருவாயைக் காட்டிலும் அதிகரித்துவிடுமோ என்று அஞ்சத் தோன்றுகிறது என்றாா் அவா்.