நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, பாதுகாப்பு கருதி உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருப்பவா்கள், அதை ஒப்படைக்குமாறு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடுநகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, பாதுகாப்பு கருதி உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருப்பவா்கள், அதை ஒப்படைக்குமாறு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, பாதுகாப்பு கருதி உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருப்பவா்கள், அதை ஒப்படைக்குமாறு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. தோ்தலை அமைதியாக நடத்துவதற்கு தோ்தல் ஆணையமும், காவல்துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, மாநில முழுவதும் உரிமத்துடன் உள்ள சுமாா் 18,853 துப்பாக்கிகளை அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் ஒப்படைக்கும்படி காவல்துறை அறிவுறுத்த தொடங்கியுள்ளது. சென்னையிலும் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை பெறுவதற்குரிய நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். சென்னையில் உரிமத்துடன் சுமாா் 3 ஆயிரம் போ் துப்பாக்கிகள் வைத்துள்ளனா்.
இதில் சில பாதுகாப்புப் பணிகளை தவிா்த்து மீதி பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும்.