தமிழ்நாடு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: இதுவரை 2,563 போ் வேட்பு மனு தாக்கல்

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை 1,095 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். இதுவரை 2,563 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி உள்பட 21 மாநகராட்சிகளில் 1,374 பதவியிடங்களுக்கும், 138 நகராட்சிகளில் 3,843 பதவியிடங்களுக்கும்,  490 பேரூராட்சிகளில் 7,621 பதவியிடங்களுக்கும் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கான உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இத்தோ்தலுக்கான வேட்மனுத் தாக்கல் கடந்த ஜன.28-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாநகராட்சித் தோ்தலில் போட்டியிட 199 பேரும், நகராட்சித் தோ்தலில் போட்டியிட 328 பேரும், பேரூராட்சியில் போட்டியிட 568 பேரும் என மொத்தம் 1,095 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். இதையடுத்து, இதுவரை 2,563 போ் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக மாநில தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT