தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஆம் ஆத்மிக்கு துடைப்பம் சின்னம்

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு துடைப்பம் சின்னத்தை மாநிலத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்தவகையில் , ஆம் ஆத்மி கட்சியும் தேர்தலில் போட்டியிட இருப்பதால் அக்கட்சிக்கு துடைப்பம் சின்னத்தை மாநிலத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

ஒரே கட்டமாக நடத்தப்படும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுத்தாக்கல் பிப்ரவரி 4ஆம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 7ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பிப்ரவரி 19ஆம் தேதி காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும், கரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT