சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் 21 வயது இளம்பெண்
சென்னை மாநகராட்சித் தேர்தலில் 98-வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 21 வயது இளம்பெண் வேட்பாளர் பிரியதர்ஷினி களம் இறங்குகிறார்.
தமிழ்நாடுசென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் 21 வயது இளம்பெண்
சென்னை மாநகராட்சித் தேர்தலில் 98-வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 21 வயது இளம்பெண் வேட்பாளர் பிரியதர்ஷினி களம் இறங்குகிறார்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் 98-வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 21 வயது இளம்பெண் வேட்பாளர் பிரியதர்ஷினி களம் இறங்குகிறார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட நிர்வாகியாக உள்ள அவருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், போட்டியிட்ட 21 வயது ஆர்யா ராஜேந்திரன், திருவனந்தபுரம் மேயரானார்.
அதே பாணியில் இப்போது, சென்னை மாநகராட்சித் தேர்தலில் 21 வயது வேட்பாளரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களம் இறக்கியுள்ளது.