தமிழ்நாடு

வேட்புமனுத் தாக்கல் நாளையுடன்(பிப்.4) நிறைவு

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளையுடன்(பிப்.2) நிறைவடைய உள்ளது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளன. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் தங்களின் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்டமாக வெளியிட்டு வருவதால் பெருவாரியான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துவருகின்றனர்.

ஒரே கட்டமாக நடத்தப்படும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் நாளை(பிப்ரவரி 4) நிறைவடைகிறது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும். 

வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 7ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பிப்ரவரி 19ஆம் தேதி காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும், கரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT