தமிழ்நாடு

பிப். 16 முதல் சென்னைப் புத்தக கண்காட்சி

DIN


சென்னை: சென்னையில் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை  புத்தக கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஜனவரியில் நடைபெறவிருந்த புத்தக கண்காட்சி, கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் பிறப்பிக்கட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், புத்தக கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, பிப்ரவரி 16ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை 45வது புத்தக கண்காட்சி நடைபெறும். கரோனா பரவல் காரணமாக, 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வருவோர் புத்தக கண்காட்சியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி நுழைவுச் சீட்டு கொடுக்கலாம் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் சென்னை புத்தகக் காட்சியை நடத்த அனுமதி வேண்டும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்தினா் (பபாசி) கடந்த செவ்வாயன்று முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்த நிலையில், புத்தக கண்காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதல்வரை சந்தித்த போது பபாசி துணைத் தலைவா் மயிலவேலன் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னையில்“ஜனவரி மாதம் நடைபெற இருந்த புத்தகக் காட்சி கரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதனால் வாசகா்களுக்காக அச்சடிக்கப்பட்ட சுமாா் ரூ.100 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. எனவே, பபாசி சாா்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சென்னை புத்தகக் காட்சியை பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் நடத்த அனுமதிக்க வேண்டும் என முதல்வரிடம் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT