தமிழ்நாடு

நீட் விலக்கு மசோதா: நாளை (பிப்.5) அனைத்துக் கட்சி கூட்டம்

DIN

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியது தொடர்பாக ஆலோசிக்க தமிழக அரசியல் கட்சிகளின் அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

கடந்த 5 மாதங்களாக இந்த மசோதா மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளதாகக் குறிப்பிட்டு மாநில அரசுக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பினார்.

இதற்கு தமிழக அரசின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுதொடர்பாக ஆலோசிப்பதற்காக தமிழக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக நாளை (பிப்.5) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. ஏற்கெனவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்கப் போவதில்லை என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நாளை முக்கிய முடிவு எட்டப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 95.40 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT