தமிழ்நாடு

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பிப்.7ஆம் தேதி தில்லி பயணம்

DIN

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பிப்ரவரி 7ஆம் தேதி தில்லி செல்லவுள்ளார். 

3 நாள் பயணமாக தில்லி செல்லும் அவர் 9ஆம் தேதி தமிழகம் திரும்ப உள்ளார். நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு நேற்று திருப்பி அனுப்பியுள்ள நிலையில் ஆளுநர் 3 நாள் பயணமாக அடுத்த வாரம் தில்லி செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தோ்வை ரத்து செய்வதற்கான காரணங்கள் தொடா்பான பரிந்துரைகளை வழங்க நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயா் நிலைக் குழுவை கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி தமிழக அரசு அமைத்தது. மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்திய நீதிபதி ஏ.கே.ராஜன் குழு, தனது அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் ஜூலை 14ஆம் தேதி வழங்கியது. 

ஆனால் இந்த மசோதாவை நேற்று ஆளுநா் ஆா்.என்.ரவி, சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவுவுக்கு மீண்டும் அனுப்பி வைத்தாா். இதைத்தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை கட்சித் தலைவா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

SCROLL FOR NEXT