புதுக்கோட்டை: தொழிலதிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது
துணிக்கடை அதிபரை கடத்தி கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டிய 3 பேரை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான மற்றோருவரை தேடி வருகின்றனர்.
விராலிமலை: துணிக்கடை அதிபரை கடத்தி கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டிய 3 பேரை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான மற்றோருவரை தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் பாலாஜி துணிக்கடை என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் ராஜஸ்தானை சேர்ந்த சூரஜ் கான் சர்மா இவர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களை பணிபுரிந்த பின்னர் தனது காரில் ஏற்றிக்கொண்டு அவர்கள் வீட்டில் இறக்கிவிட்டு விட்டு திரும்பி வரும் வழியில் காரை வழிமறித்த முனியாண்டி(45), சசிக்குமார் (34), நாகராஜன் (35),யோகானந்தம்(32)ஆகிய நான்கு பேர் சூரஜ் கான் சர்மாவிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.
இதனையடுத்து அவர்களிடம் தப்பி வந்த சூரஜ் கான் சர்மாவின் அலைபேசிக்கு அலைந்து அந்த கும்பல் பணம் கேட்டு தொடர்ந்து அவரை மிரட்டியுள்ளனர். இதனை அடுத்து நடந்த விபரம் குறித்து இலுப்பூர் காவல் நிலையத்தில் சூரஜ் கால் சர்மா அளித்த புகாரைத் தொடர்ந்து காவலர்கள், முனியாண்டி, சசிக்குமார், நாகராஜன் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான யோகானந்தத்தை தேடிவருகின்றனர்.
இதில் நாகராஜன் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.