நீட் அனைத்துக் கட்சிக் கூட்டம்: அதிமுகவும் புறக்கணிப்பு
நீட் விலக்கு மசோதாவின் அடுத்த கட்டம் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அதிமுகவும் புறக்கணித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நீட் விலக்கு மசோதாவின் அடுத்த கட்டம் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அதிமுகவும் புறக்கணிக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், சட்ட வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்த சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தக் கூட்டம் காலை 11 மணிக்கு நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறுகிறது.
இதையும் படிக்க | நீட்: காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம்; பாஜக புறக்கணிப்பு
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பாஜக புறக்கணிப்பதாக அதன் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை ஏற்கெனவே அறிவித்துள்ளார். இந்த நிலையில், அதிமுகவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. கூட்டத்தைப் புறக்கணிப்பதற்கான காரணம் குறித்த விளக்கம் கட்சித் தரப்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியத்திடம் இதுபற்றி கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு, எதிர்காலத்தில் அந்தக் கட்சிகளும் மக்களால் புறக்கணிக்கப்படும் என்று அவர் பதிலளித்தார்.