தமிழ்நாடு

புதுச்சேரி ஜிப்மரில் மீண்டும் வெளிப்புற சிகிச்சைக்கு அனுமதி

புதுவை மாநிலத்தில் கடந்த ஜனவரி முதல் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்ததால், கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.

DIN

புதுவை மாநிலத்தில் கடந்த ஜனவரி முதல் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்ததால், கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் நேரடி சிகிச்சை மூடப்பட்டது.

இணையவழியில் முன்பதிவு செய்யும் தினசரி 50 பேருக்கு மட்டும் சிகிச்சைக்காக அனுமதி வழங்கப்பட்டது. இந்தநிலையில், தற்போது தொற்று குறைந்துள்ளதால், மீண்டும் வரும் திங்கள் (பிப்.7) முதல் வெளிப்புற சிகிச்சை அனுமதிக்கப்படுகிறது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவுக்கு வரும் 7ம் தேதி முதல் முன்பதிவின்றி, நேரடியாக நோயாளிகள் வரலாம் என்று ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் அறிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

ஆய்வக மருத்துவ சேவையை மேம்படுத்த விவேகானந்த கல்வி நிறுவனங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தலைக்கவசம்: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு

மேல்விஷாரம் நகராட்சி நியமன உறுப்பினா் பதவியேற்பு

1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்: தேர்வு முடிவுகள், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் டிஆர்பி தளத்தில் வெளியீடு!

SCROLL FOR NEXT