தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: சென்னையில் காவல் அதிகாரிகள் ஆலோசனை

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு சென்னை காவல் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
சென்னை பெருநகர காவல் உதவி ஆணையர்கள் மற்றும் அதற்கு மேலுள்ள காவல் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் கலந்தாய்வு கூடத்தில் இன்று நடைபெற்றது. 
வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவலர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாவட்ட வாரியாக பணி ஒதுக்கீடு செய்யும் திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும், DARE (Drive Against Rowdy Elements), DAD (Drive Against Drugs), DABToP (Drive Against Banned Tobacco Products) ஆகியவை குறித்த சீராய்வு செய்யப்பட்டது.
குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்வது சம்பந்தமாகவும், பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் பிணைக்கு உட்படுத்தப்படும் நபர்கள் மற்றும் பிணையை மீறி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாகவும் சீராய்வு செய்யப்பட்டது. 
மேலும், காவல் அதிகாரிகள் அனைவரும் அனைத்து வாக்கு மையங்கள், வாக்கு சாவடிகள், குழுவாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது மற்றும் போலீசார் வாகன தணிக்கை செய்யும் பிரசனைக்குரிய இடங்களில் நேரடியாக சென்று கண்காணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. 
தேர்தல் நடத்தை விதிகள் குறித்த சமீபத்திய வழிகாட்டுதல்களை உடனடியாக கடைபிடிக்கவும் / அமல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT