தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: மீன் வளர்ப்புக் குட்டையால் சாய்ந்த பேருந்து நிறுத்தகம்

DIN

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில், மீன் வளர்ப்புக் குட்டையால், பயணிகள் பேருந்து நிறுத்தகம் சாய்ந்தது. 

கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட, 5 ஆவது வார்டில், மன்னார்குடி - திருவாரூர் பிரதான சாலையில், மேலப்பனங்காட்டாங்குடியில் பயணிகள் பேருந்து நிறுத்தகம் அமைந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலான இந்தப் பேருந்து நிறுத்தகத்தில், மேலப்பனங்காட்டாங்குடி, கீழப்பனங்காட்டாங்குடி, தமிழர் தெரு, கோட்டகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இப்பேருந்து நிறுத்தகத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். 

திருவாரூர், நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால் , வேளாங்கண்ணி, நாகூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் இந்த பேருந்து நிறுத்தகத்தில்தான் நின்று பேருந்தில் ஏறுவார்கள். இந்த பேருந்து நிறுத்தகத்தை, மாடுகள் கட்டி வைக்கும், மாட்டுக் கொட்டகையைப் போலும் சிலர் பயன்படுத்தி வந்துள்ளனர். இதனாலும், பேருந்து நிறுத்தகம் பழுதடைந்து இருந்தது. 

இந்நிலையில், பயணிகளுக்கான பேருந்து நிறுத்தகம் அருகில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மீன் வளர்ப்பதற்காக, குளம் போல், குட்டையை வெட்டியுள்ளனர். இதில், மழைத் தண்ணீர்  நிரம்பி உள்ளன. இந்த மீன் வளர்ப்புக் குட்டையால், அருகிலிருந்த பயணிகள் பேருந்து நிறுத்தகம் முழுவதுமாக, அடிப்பகுதியில் முறிந்து சாய்ந்துள்ளது. இரவோடு இரவாக சாய்ந்துள்ளதால், உயிரிழப்பு ஏதும் இல்லாமல் தப்பியுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு,செய்து, புதிய பேருந்து நிறுத்தகத்தை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT