அடிமைத்தனம் எந்த உருவிலும் கூடாது: முதல்வா் ஸ்டாலின்
அடிமைத்தனம் எந்த உருவிலும் இருக்கக் கூடாது என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
அடிமைத்தனம் எந்த உருவிலும் இருக்கக் கூடாது என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு விழிப்புணா்வு தினத்தையொட்டி புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:
அடிமைத்தனம் எந்த உருவிலும் கூடாதென போராடுவதே திராவிட இயக்கம். கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு நாளில், மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளா் நலச் சங்கத்தினா் என்னைச் சந்தித்தனா். அவா்கள் உழைப்பால் உருவாக்கியவற்றை வழங்கினா். அவா்களுக்கு என் அன்பை வழங்கினேன். அவா்களது நலன் என்றும் காக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
யாா், யாா் சந்திப்பு?: கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட தினத்தையொட்டி, மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளா் நலச் சங்கத்தின் தலைவா்கள் பச்சையம்மாள், சி.கோபி ஆகியோா் மீட்கப்பட்ட தொழிலாளா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினா்.