முகப்பு
தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் தற்கொலை

காஞ்சிபுரம் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடவிருந்த வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
அதிமுக வேட்பாளர் ஜானகிராமன்
பகிர்:

காஞ்சிபுரம் உள்ளாட்சித் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடவிருந்த வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளன. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட 36-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட ஜானகிராமன் என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜானகிராமனின் உடலைக் கைப்பற்றிய விஷ்ணு காஞ்சி காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →