முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் 68 ஆகக் குறைந்த கரோனா பாதிப்பு

புதுச்சேரியில் தினசரி கரோனா பாதிப்பு 68 ஆகக் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:24 AM
கோப்புப்படம்
பகிர்:

புதுச்சேரியில் தினசரி கரோனா பாதிப்பு 68 ஆகக் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 1,971 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், புதுச்சேரியில் 39, காரைக்காலில் 16, யேனம் 8 மற்றும் மாஹேவில் 5 பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளது. 

இன்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களை அடுத்து புதுச்சேரியில் மொத்த பாதிப்பு 1,65,363 ஆக உயர்ந்துள்ளது. 

சுகாதாரத் துறை இயக்குநர் ஜி ஸ்ரீராமுலு கூறுகையில், 

தற்போது புதுவையில் 900 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 865 பேர் வீட்டுத் தனிமையிலும், 35 பேர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருனிற்னர். 

தொற்று காரணமாக மேலும் ஒருவர் பலியான நிலையில், மொத்த உயிரிழப்பு 1,959 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 196 பேர் நோயிலிருந்து விடுபட்ட நிலையில், 1,62,504 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். 

மொத்தம் 21,94,136 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், 18,38,031 பேருக்குத் தொற்று இல்லை என்று வந்துள்ளது. இதுவரை 15,57,738 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.