முகப்பு
தமிழ்நாடு

தேமுதிக நிர்வாகி கொலை: விஜயகாந்த் கண்டனம்

கோவையில் தேமுதிக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதற்கு அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:25 AM
பகிர்:

கோவையில் தேமுதிக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதற்கு அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தேமுதிகவின் கோவை ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவர் பொன்னுசாமி, சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது.
 இந்தச் சம்பவத்தால் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எந்தளவுக்கு சீரழிந்துள்ளது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. கொலையாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த பொன்னுசாமியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார் விஜயகாந்த்.

முழு கட்டுரையைப் படிக்க →