தமிழ்நாடு

50 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்து அதிமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

DIN

ஒசூர்: 50 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்து மாணவர்களின் அறிவை பெருகியது அதிமுக அரசு என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஒசூரில் மாநகராட்சிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பேரூராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஒசூர் ராம்நகரில் புதன்கிழமை பொதுக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது.

ஒசூரில் தொழிற்சாலைகளும் விவசாயமும் சிறந்து விளங்குகிறது ஒசூர் குட்டி ஜப்பான் போல செயல்பட்டு வருகிறது. ஒசூருக்கு வந்தால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றார்.தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசில்  8 அமைச்சர்கள் அதிமுக வை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அதிமுகவில் இருந்து திமுகவிற்கு கட்சி மாறி சென்றவர்கள். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சாலை வசதிகளை செய்து கொடுத்து அதிமுக அரசு பல்வேறு புதிய புதிய தொழிற்சாலைகளை கொண்டுவந்தது அதிமுக அரசு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருசக்கர வாகன உற்பத்தி ஆலை ஒலோ, டாட்டா எலக்ட்ரானிக்ஸ், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் போன்ற பெரிய, பெரிய தொழிற்சாலைகளை கொண்டு வந்தது அதிமுக அரசு.

நீட் தேர்வு காங்கிரஸ் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து நேருக்கு நேர் விவாதம் பண்ண மு.க.ஸ்டாலின் இதுவரை வரவில்லை. நாங்கள் தயாராக இருக்கிறோம். சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக கொடுத்த 500 வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத  முதல்வர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்க வராமல் காணொலி காட்சி வாயிலாக தேர்தலை சந்தித்து வருகிறார்.

நேராக வந்தால் மக்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கேட்பார்கள் என்று தெரிந்து அவர் காணொலி காட்சி வாயிலாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். ஒசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தியது அதிமுக. அரசு ஒசூரில் மாநகராட்சி அலுவலகத்தை கட்டி வைத்தது அதிமுக அரசு  ராமநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்தது. எனவே முதல் மேயராக அதிமுகவை சேர்ந்தவர் வர வேண்டும் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் கேட்டுக்கொண்டார்.

இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஓசூர் மாநகரச் செயலாளர் எஸ் நாராயணன் மற்றும் 44 அதிமுக வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT